அப்பா பிளீஸ்…! “ஒரே ஒரு முறை வந்து பாத்துட்டு போங்க” இறந்துபோன தந்தைக்கு மெசஜ் அனுப்பும் 7 வயது சிறுவன்….!!

கடந்த வருடம் இறந்த தன்னுடைய தந்தைக்கு ஏழு வயது மகன் மெசேஜ் அனுப்பும் சம்பவம் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கடூல்  கிராமத்தில் கடந்த வருடம் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி மன்பிரீத்  சிங் உயிரிழந்துள்ளார் .இதை அறியாத அவருடைய ஏழு வயது மகன் தன்னுடைய தந்தை செல்போனுக்கு தினமும் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதாவது அப்பா ஒரே ஒருமுறை வந்து என்னை பார்த்துவிட்டு நீங்கள் மீண்டும் உங்கள் பணியை தொடருங்கள். என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் .மேலும் வீடியோ கால் செய்யுங்கள் என்று கேட்பதாகவும் அந்த சிறுவனின் தாய் வேதனையோடு பகிர்ந்து உள்ளார்.

You May Also Like

More From Author