பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்கள், பொது போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
இந்த நிலையில் தடை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. வருகிற 24-ம் தேதி வரை அனைத்து பாகிஸ்தான் விமானங்களும் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
ஏப்ரல் 30-ம் தேதி இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் ஏப்ரல் 24-ம் தேதி அவர்களின் வான்வெளியை பயன்படுத் தடைவிதித்தது.