சர்வதேச ஒத்துழைப்புக்கான 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தில் பங்கெடுக்க சீனாவுக்கு வந்த இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விதோதோவுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 17ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பின் பிராந்திய முன்னணியில் சீனவும் இந்தோனேசியாவும் உள்ளன. இந்த ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிவதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் முக்கிய முன்மாதிரியாகவும் மாறியுள்ளது.
சீனா, இந்தோனேசியாவுடன் இணைந்து, நவீனமயமாக்கம் மற்றும் தேசிய மறுமலர்ச்சி பாதையில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, மேலும் உயர்நிலை பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பை மேற்கொண்டு, சர்வதேச மற்றும் பிராந்திய அமைதிக்கும் செழுமைக்கும் இடைவிடாமல் உந்து சக்தியை ஊட்ட விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.