சர்வதேச ஒத்துழைப்புக்கான 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டம் 18ஆம் நாள் நடைபெறவுள்ளது.
இம்முன்மொழிவு, உலகின் வறுமை குறைப்பில் ஆற்றிய பங்கு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 17ம் நாள் கூறுகையில்,
வறுமை ஒழிப்பு, ஐ.நாவின் 2030ம் ஆண்டு தொடர வல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் தலையாய இலக்காகும்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10 ஆண்டுகளில், வறுமை குறைப்பை எப்போதும் முக்கிய திசையாகக் கொண்டு, சர்வதேச ஒத்துழைப்பு மூலம் வறுமையை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்முன்மொழிவு, சுமார் இலட்சம் கோடி அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்த்து, 4 கோடி மக்களை வறுமை நிலையிலிருந்து விடுவித்துள்ளது என்று தெரிவித்தார்.