வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு : தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு காலியிடங்களை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி
06-07-2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
26-07-2024
காலியிடங்கள் விவரம் :
அலுவலக உதவியாளர்
4
துப்புரவாளர்
1
தோட்டத் துப்புரவாளர்
1
கல்வி தகுதி :
தமிழ் வளர்ச்சித் துறையில், அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறையில், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
அலுவலக உதவியாளர்
ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை மற்றும் பிற படிகள்
துப்புரவாளர்
ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை மற்றும் பிற படிகள்
தோட்ட துப்புரவாளர்
ரூ.4,100/- முதல் ரூ.12,500/- வரை
வயது வரம்பு & பணிக்கான இடம் :
குறைந்தபட்ச வயது வரம்பு
18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு
32 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்
சென்னை
தேர்ந்தெடுக்கும் முறை :
மேற்கண்ட அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முகவரி :
தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் சாலை, எழுமூர், சென்னை – 600008 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tamilvalarchithurai.tn.gov.in/ இணையத்தளத்தில் வெளியாகி இருக்க கூடிய வேலை அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இந்த வேலைகளுக்கான விண்ணப்பிக்கும் படிவத்தை அங்கிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும், அல்லது இந்த PDF ஐ க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்த அந்த படிவத்தை ஒரு நகல் எடுத்து அதில் தவறில்லாமல் சரியாக பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை உடன் இணைத்து மேற்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கடைசி தேதியான 26-07-2024-க்குள் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
குறிப்பு :- (விண்ணப்பக் கட்டணம் கிடையாது).