சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 3ஆம் நாள் பிற்பகல் அஸ்தானாவில் அஸர்பைஜான் அரசுத் தலைவர் அலியேவைச் சந்தித்துரையாடினார்.
இரு தரப்புறவை நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்துவதென அவர்கள் தீர்மானித்தனர்.
ஷிச்சின்பிங் கூறுகையில் சீனாவும் அஸர்பைஜானும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை அளிக்கும் நல்ல நண்பர்களாகும்.
இரு நாட்டுறவு சீராக வளர்ந்து, இரு நாட்டு ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. ஒன்றுக்கொன்று ஆதரவை அதிகரித்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இரு நாடுகளும் தொடர்ந்து பாடுபடும் என்று சுட்டிக்காட்டினார்.