13ஆவது சீன மகளிர் தேசிய மாநாடு அக்டோபர் 23ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங், லீ ச்சியாங், சாவ் லேஜி, வாங் ஹுநிங், சாய் ச்சீ, லீ ஷி உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். டிங் சுயேசியாங், கட்சி மத்தியக் கமிட்டியின் சார்பில் உரை நிகழ்த்தினார்.
12ஆவது சீன மகளிர் தேசிய மாநாட்டுக்குப் பிறகு, ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட கட்சி மத்தியக் கமிட்டியின் தலைமையில், வறுமை ஒழிப்புப் பணி, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம், தொற்று நோய் தடுப்பு, குடும்பம் மற்றும் குடியிருப்பு ஆகியவற்றின் முன்களத்தில் முன்முயற்சி மற்றும் பொறுப்புடன் போராடி வருகின்றனர்.
மகளிரின் பங்களிப்பு முழுமையாக அளிக்கப்படுவதோடு, மகளிரின் வளர்ச்சியும் பன்முகங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று டிங் சுயேசியாங் தனது உரையில் குறிப்பிட்டார்.
பல்வேறு நிலை மகளிர் சம்மேளன அமைப்புகள் சீன தனிச்சிறப்புடைய சோஷலிச வளர்ச்சிப் பாதையில் உறுதியுடன் நடைப்போட்டு, சொந்த செயல்திறன்களை உணர்வுபூர்வமாக நிறைவேற்றி, கட்சியின் வளர்ச்சிக்கு மகளிரின் ஆற்றல் மற்றும் ஞானத்தை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.