ஷாங்காயில் சர்வதேச நாணய நிதியத்தின் பிராந்திய மையம் நிறுவல்

சீனாவின் ஷாங்காயில் சர்வதேச நாணய நிதியத்தின் பிராந்திய மையம் நிறுவப்பட்டதாக ஜுன் 19ஆம் நாள் ஷாங்ஹாயில் நடைபெறுகின்ற லூ ச்சியாசூய் மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தில் இந்நிதியம் அறிவித்தது.


உலகளவில் இந்நிதியம் நிறுவிய பிராந்திய மையங்களில் ஒன்றாக ஷாங்ஹாய் மையம் விளங்குகின்றது. சர்வதேச நாணய நிதியத்திற்கும் ஆசிய பசிபிக் பிரதேசத்தின் பொருளாதார நாடுகளுக்குமிடையிலான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது, புதிய சந்தைகள் மற்றும் நடுத்தர வருமான நாடுகள் கூட்டாக கவனம் செலுத்தும் துறைகளை ஆய்வு செய்வது, இப்பிரதேசத்தில் பொருளாதார நாடுகளின் திறன் மேம்பாட்டுக்கு ஆதரவு அளிப்பது, உலக மற்றும் பிரதேச நிதி நிதானத்தைப் பேணிக்காப்பது ஆகியவை இம்மையத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Please follow and like us:

You May Also Like

More From Author