ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஒரே மாதிரியாக செயல்படும் வகையில் சாட் ஜிடிபி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பலரும் தங்களின் வாய்மொழி உத்தரவின் மூலமாக தங்களுக்கு விருப்பப்பட்ட செயல்களை செயல்படுத்தலாம். இந்நிலையில் திருமண வரன் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுவரும் ரஷ்ய இளைஞர் கூட்டம் சாட் ஜிபிடி AI தொழில்நுட்ப உதவியை நாடி படையெடுத்து வருகின்றனராம்.
சாட் ஜிபிடி ஆலோசனைகளை பின்பற்றி டேட்டிங் ஆப்பில் கலந்துரையாடி வாழ்க்கை துணையைத் தேடி வருகிறார்களாம்.
அந்த வகையில் ரஷ்ய இளைஞர் அலெக்சாண்டர் (23) ஏறக்குறைய 5,000 பெண்களுடன் பேசி, அதில் தனக்கு பிடித்துப்போன கரீனா என்பவரை திருமணம் செய்து கொண்டாராம்.