2024ஆம் நிதியாண்டில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக மாறியுள்ளது சீனா.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சீனா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
2021ஆம் நிதியாண்டில் சீனா, இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்தது. அதன் பிறகு, 2022 மற்றும் 2023ஆம் நிதியாண்டில் சீனா, தனது முதலிடத்தை அமெரிக்காவிடம் பறிகொடுத்தது.
இந்நிலையில், சீனா மீண்டும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்துள்ளது.
2024ஆம் நிதியாண்டில் சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 118.4 பில்லியன் டாலராக இருந்தது.
மேலும், இறக்குமதி 3.24 சதவீதம் அதிகரித்து 101.7 பில்லியன் டாலராக இருந்தது.