விஜயகாந்த், குமரி அனந்தனுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம்..

Estimated read time 0 min read

தேமுதிக தலைவர் விஜயகாந்த் , காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டவர்கள் மறைவுக்கும் திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை உத்தங்குடியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கழக உறுப்பினர்களிடன் வாழ்த்து பெற்றவாறே விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோரின் உருவப்படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து வாழ்த்துரையுடன் பொதுக்குழு தொடங்கிய நிலையில், மறைந்த தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தவகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராணி எலிசபெத், போப் பிரான்சிஸ், ராம்விலாஸ் பஸ்வான், எம்.சன்கரய்யா, எம்.எஸ்.சுவாமிநாதன், சீதாராம் யெச்சூரி, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், திருமகன் ஈ.வெ.ரா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பங்காரு அடிகளார், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோருக்கும் திமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

More From Author