அமெரிக்க நாட்டில் மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகள் விநியோகம் செய்யும் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது போன்று உடனடியாக துப்பாக்கி குண்டுகளை பெறக்கூடிய பிரத்தியேக மெஷின் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள ஓக்கலாஹோமா மற்றும் டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள சில மளிகை கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மெஷின் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதற்கான உரிய லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருப்பவர்கள் அதற்கான ஆவணத்தை உரிய முறையில் காண்பித்து துப்பாக்கி குண்டுகள் வழங்கும் இயந்திரத்தில் இருந்து தேவையான குண்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த புதிய மெஷினை பல்வேறு இடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.