வேளாண்மை அறிவைப் பரப்புரை செய்யவும், நகர்ப்புற விவசாயத்தின் வளர்ச்சியை முன்னேற்றவும், ஹெபெய் மாநிலத்தின் ஜெங்டிங் நகரில் ஒரு சிறப்பான பண்ணை உண்டு. தொங்ஃபு ஸ்மார்ட் பண்ணை என்பது அதன் பெயர்.
மொத்த பரப்பளவு 10ஆயிரம் சதுர மீட்டர். உள்ளூர் அரசு மற்றும் நிறுவனத்தின் கூட்டு மேலாண்மையில், பசுமை வளர்ச்சி, சுற்றுலா பார்வை மற்றும் நவீன விவசாயம் ஆகியவை கொண்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை அதுவாகும்.
இந்த நவீன பண்ணையில், மீன் வளர்ப்பு மற்றும் ஹைட்ரோபோனிக் விவசாயம் ஒருங்கிணைந்த முறை காணப்படுகிறது. அதன் மூலம், மீன் வளர்ப்புக்கு நீரை மாற்ற தேவையில்லை. காய்கறி சாகுபடிக்கு உரம் தேவையில்லை. மேலும், பசுமைக் கூடாரத்தில், பல உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நவீனம் மற்றும் நுண்ணறிவு வாய்ந்த சூழல் உருவானது. விளைச்சல் மற்றும் தரத்தை உயர்த்துவதோடு, விவசாய உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும்.
இந்த பண்ணையின் மூலம், ஆண்டுதோறும் கிராமத்துக்குக் குறைந்தது 1 கோடி யுவான் சம்பளம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, 200க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு டா யுவான் ஜூவாங் கிராமத்துக்கு கூட்டு வருமானம் 3 கோடி யுவானாக அதிகரித்துள்ளது.
நபர்வாரி வருவாய் 35ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. அரசு மற்றும் நிறுவனத்தின் ஒத்துழைப்பு மூலம், கிராம வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தொங்ஃபு ஸ்மார்ட் பண்ணை, ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது. கிராமவாசிகளின் வருமான அதிகரிப்பு, வேளாண்மையின் நவீனமயமாக்கல் மற்றும் கிராம வளர்ச்சிக்கும் அது முக்கிய பங்காற்றியுள்ளது.