சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 11 திங்கட்களில் சீனாவின் சரக்கு வர்த்தக இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை 39 இலட்சத்து 79 ஆயிரம் கோடி யுவானாகும்.
இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகரித்து, நிதானமாக உயர்ந்து வருகிறது. இதில் ஏற்றுமதித் தொகை 23 இலட்சத்து 4 ஆயிரம் கோடி யுவானாகும். கடந்த ஆண்டை விட 6.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இறக்குமதித் தொகை
16 இலட்சத்து 75 ஆயிரம் கோடி யுவானாகும். கடந்த ஆண்டை விட 2.4 விழுக்காடு அதிகமாகும்.
இயந்திர மற்றும் மின்சார உற்பத்தி பொருளின் ஏற்றுமதி தொகை 13 இலட்சத்து 7 ஆயிரம் கோடி யுவானாக, கடந்த ஆண்டை விட 8.4 விழுக்காடு அதிகரித்து, இதே காலத்தில் சீனாவின் மொத்த ஏற்றுமதித் தொகையில் 59.5 விழுக்காட்டை வகிக்கிறது.
எரியாற்றல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் கனிமப் பொருட்களின் இறக்குமதித் தொகைகள் முறையே 6.3 விழுக்காடகவும் 4.3 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளன.