திருப்பரங்குன்ற மலை, தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத மோதலை உருவாக்கும் அனைத்து முயற்சிகளிலும் திமுக அரசு ஈடுபடுகிறது என்றும், சிக்கந்தர் தர்கா இருக்கும் இடம் மட்டுமே முஸ்லிம்களுக்கு சொந்தம் என தெரிவித்தார்
தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தமானது என்றும், அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே பொய் கூறியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
பிரச்சனைகள் அனைத்தும் கடந்த 2016-ல் முடிந்து விட்டதாக அமைச்சர் ரகுபதிதவறான கருத்தை தெரிவித்துள்ளார் 2014, 2017 உயர்நீதிமன்ற தீர்ப்பை திரித்து அவர் கூறியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை சரியாக செயல்படாத காரணமாகவே சிஐஎஸ்எப் படையினர் செல்ல நீதிபதி உத்தரவிட்டார் என்றும், அரசு வற்புறுத்தியதால் தான் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்ததாகவும் அவர் சாடினார்.
கோயில் சொத்தை பாதுகாக்க வேண்டிய செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தது ஏன்? எனறும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாகவும், நீதிமன்றம் கூறுவதை ஸ்டாலின் அரசு பின்பற்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றும்,
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா என்பதை கூற வேண்டும் என்றும அண்ணாமலை கூறினார்.
