நாம் சமைக்கும்போது ஒரு சில காய்கறிகள் இல்லாமல் சமைத்து விடலாம். ஆனால் தக்காளி இல்லாமல் சமையலே செய்ய முடியாது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் தக்காளி விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாயை தொட்டுள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
40 ரூபாயாக இருந்த தக்காளி விலை தற்போது 80 ரூபாயை தொட்டுள்ளது. விரைவில் 100ஐ தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தான் தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.