22ஆம் நாள் வெளியான தரவின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் விரைவு அஞ்சல் வழியாக 13 ஆயிரத்து 207 கோடி பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் இருந்ததை விட, அது 19.4விழுக்காடு அதிகரித்து கடந்த 10வது ஆண்டு தொடர்ச்சியாக உலகின் முதலிடம் பிடித்தது.
ஒரு நாளுக்கு சராசரியாக 35கோடி பொதிகள் கையாளப்படுவது என்பது தற்போது சீன விரைவு அஞ்சல் துறையின் வளர்ச்சியளவாகும். 2023ஆம் ஆண்டு, சீனாவின் நுகர்வு செலவு பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு விகிதம் 82.5விழுக்காட்டை எட்டியுள்ளது. 4.2விழுக்காடான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துள்ளது.
தற்போது, உலகின் மிகப் பெரிய உயர்வேக இருப்புப்பாதை மற்றும் உயர்வேக நெடுஞ்சாலை வலைப்பின்னலையும் உலக தரமான துறைமுகங்களையும் சீனா கட்டியமைத்துள்ளது.
4கோடியே 87லட்சம் கிலோமீட்டர் நீளம், 2லட்சத்து 30ஆயிரம் விரைவஞ்சல் சேவை சாவடிகள், நாளுக்கு சராசரியாக 70கோடி மக்களுக்குச் சேவையளிக்கும் செயல்திறன் கொண்ட மாபெரும் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புலிமவுத் ராக் காப்பீட்டுக் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜேம்ஸ் ஸ்டோன் கூறுகையில், அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் சீன அரசு மிக தேர்ச்சியாக இருக்கும்.
தொழில்நிறுவனங்கள் குறைவான செலவில் உயர் செயல்திறனுடன் பொருட்களை அனுப்புவதற்கு உயர் தரமான நெடுஞ்சாலை மற்றும் இருப்புப்பாதை போன்ற சிறந்த வசதி அளிக்கப்படுகிறது என்றார்.
இன்று, சீன விரைவஞ்சல் சீனாவின் புகழ் பெற்ற அடையாளமாக மாறியுள்ளது.
அதன் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் நுகர்வின் அதிகரிப்பை வெளிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு பொதியும் சீனப் பொருளாதாரம் சீராகவும் நிலையாகவும் வளர்ச்சியடைந்துள்ளதை நிரூபித்துள்ளது.