அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டிற்கு (RNC) அருகே சாமுவேல் ஷார்ப் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர் ஓஹியோ காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்ததாகக் கூறப்படும் சில நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாநாட்டின் இடத்தின் அருகிலுள்ள வீடற்ற முகாமில் வசிப்பவரும் மனநலம் பாதிக்கப்பட்டவருமான ஷார்ப், சம்பவத்தின் போது இரண்டு கத்திகளை வைத்திருந்தார் எனக்கூறப்படுகிறது.
திங்கட்கிழமை இரவு மில்வாக்கி RNC இல் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் காயத்திற்குப் பிறகு, டிரம்ப் தனது முதல் பொதுத் தோற்றத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.