தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதாவது காலை 8:30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை அம்மன் கோவிலுக்கு வேன் மூலமாக அழைத்து செல்லப்படுகிறார்கள். மதியம் கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது .
இந்த சுற்றுலாத் திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய், 800 ரூபாய் என்ற இரண்டு பிரிவுகளாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது .சுற்றுலா செல்லும் வேன் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும். ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.