சென்னை –புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்;
பச்சரிசி= ஒரு கப்
வெல்லம்=முக்கால் கப்
நெய் =தேவையான அளவு
ஏலக்காய்= இரண்டு
சுக்கு பொடி =கால் ஸ்பூன்
செய்முறை;
பச்சரிசியை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். அரிசி சற்று ஈரமாக இருக்க வேண்டும் . ஆனால் கையில் ஒட்டக்கூடாது. இப்போது அரிசி ,ஏலக்காய் ,சுக்கு பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய்யும் ஊற்றி உருண்டையாக உருட்டி கொள்ள வேண்டும். பிறகு உங்களுக்கு தேவையான அளவு விளக்கை தயார் செய்து விளக்கேற்றலாம்.