திருச்செந்தூரில் பங்குனி உத்திரம் விழா – குவியும் பக்தர்கள்!

Estimated read time 1 min read

தென்மாவட்டங்களில் மிகவும் புகழ் பெற்றது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். இந்த கோவிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா நடைபெற உள்ளது.

இதன் உபகோயிலான நாலுமூலைக்கிணறு, குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலிலும் வரும் 24 -ம் தேதி பங்குனி உத்திரம் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருநாளில் திருச்செந்தூர் திருக்கோயிலில், அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரம் அன்று நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

24-ம் தேதி அன்று அதிகாலை 3 மணிக்குக் கோவில் நடை திறப்பு, அதிகாலை 3:30 விஸ்வரூபம் தரிசனம், அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 6 மணிக்கு வள்ளியம்மன் தவசு மண்டபம் புறப்படுதல் நடைபெறும்.

அன்றைய தினம் மாலை 4 மணிக்குச் சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்குத் தபசில் உள்ள வள்ளி அம்பாளை அழைத்து வர சுவாமி புறப்பாடு, வள்ளியம்மன் திருக்கல்யாணம் முன்னிட்டு, சுவாமி அம்பாளுக்குக் காட்சியருளி தோள்மாலை மாற்றித் திருவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்தல். இராக்கால அபிஷேகம் நடைபெறாது.

இதனிடையே, இரவு 9 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மேலும், இக்கோயிலின் உபகோயிலான குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

பங்குனி உத்திர விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author