உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.
  சமீபத்திய தகவலின்படி, இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
  சண்டிகர் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயில், அசாமில் உள்ள திப்ருகர் நோக்கிச் சென்றது.
  அப்போது, உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச்-ஜிலாஹி ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டது.
  தற்போது ரயில்வே துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
  இது குறித்து அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா ஷர்மாவிற்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                             
                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                