சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் நவம்பர் 24ஆம் நாள் கூறுகையில், சீனா-வெளிநாடுகளிடையே பொது மக்கள் தொடர்புக்கு வசதி அளித்து, உயர்தர வளர்ச்சி மற்றும் உயர்நிலை திறப்புப் பணிக்கு சேவை வழங்கும் விதம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாடுகளின் பொது பாஸ்போர்ட் கொண்டவர்களுக்கு விசா இல்லா கொள்கையைச் சீனா சோதனை முறையில் ஒரு சார்பாக மேற்கொள்ளும். 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல், 2024ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் வரை, இவர்கள் சீனாவில் 15 நாட்களுக்குள் வணிகம், சுற்றுலா, குடும்பதினர் மற்றும் நண்பர்களுடன் சந்திப்பு முதலியவற்றுக்காக விசா தேவையில்லை என்றார்.