தென்னாப்பிரிக்காவின் ஆசியா மற்றும் பிரிக்ஸ் விவகாரத்திற்கான சிறப்பு பிரதிநிதி அனில் சூக்லால் அண்மையில், சீன ஊடகக் குழுமத்திற்குப் பேட்டியளித்தார்.
அப்போது, உக்ரைன் நெருக்கடி குறித்துப் பேசிய அவர், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீர்த்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் முயற்சி செய்து வருகின்றன எனத் தெரிவித்தார்.
மேலும், 2023ஆம் ஆண்டுக்கான பிரிஸ்க் நாடுகளின் உச்சிமாநாடு ஆக்ஸ்ட் திங்கள், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது.
பிரிஸ்க் நாடுகளின் தலைமை வகிக்கும் நாடான தென்னாப்பிரிக்கா, இந்த உச்சிமாநாட்டில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தொடர்புடைய ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.