மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் முதல் மற்றும் ஒரே கட்ட வாக்குப்பதிவு 288 தொகுதிகளிலும் காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளை உள்ளடக்கிய இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக, 43 இடங்களுக்கு, நவம்பர், 13ல் நடந்தது.
அதிக வாக்காளர் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) SVEEP திட்டத்தின் கீழ் மல்டிமீடியா பிரச்சாரங்கள், மனித சங்கிலிகள், தெரு நாடகங்கள், மாரத்தான்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது.