உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதிகளைச் சீனா நடைமுறைப்படுத்துவது பற்றிய 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் அண்மையில் வெளியிட்டது.
வாக்குறுதி நடைமுறையாக்கத்தில் சீனா ஈட்டியுள்ள சாதனைகளை அமெரிக்கா நிராகரித்ததோடு, சீனாவின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பு முறையும் கொள்கையும் உலக வர்த்தகத்துக்குப் பெரிய அறைகூவல்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் அமெரிக்கா இவ்வறிக்கையில் அவதூறு பரப்பியுள்ளது.
இவ்வறிக்கையின் மூலம், சரி எது தவறு எது என்று குழப்ப முயன்ற அமெரிக்காவின் சதித் திட்டம் பலிக்காது. ஏனென்றால் உண்மை என்பது கண்முன் இருப்பதைப் போலத் தெளிவானது.
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகையில், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்பு முறையை முற்றிலும் மாற்றுவதை உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த போது அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தியதன் மைய மதிப்பீட்டு வரையறையாக அமெரிக்காவின் இவ்வறிக்கை அமைத்துள்ளது.
அமெரிக்காவின் கோரிக்கையின்படி, சீனா அமைப்பு முறைச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாக்குறுதி நடைமுறையாக்கத்தில் சீனா ஈட்டியுள்ள மாபெரும் முன்னேற்றங்களை அமெரிக்கா முற்றிலும் புறக்கணித்துள்ளது.
இவ்வறிக்கைக்கு நம்பத்தக்க தன்மை ஒன்றும் இல்லை. அதனை எப்படி உருவாக்கினாலும், அரசியல் நோக்கிற்கு இயற்றிய போலி அறிக்கையின் தன்மையை மாற்ற முடியாது.