நவம்பர் 24ஆம் நாள் குவாங்சோ நகரிலிருந்து ஜியேயாங் நகருக்குச் சென்ற CZ3892 விமானச் சேவையில், சீனா தயாரித்த ARJ21 பயணியர் விமானம் 1 கோடியாவது பயணியை வரவேற்றது.
2016ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ARJ21 பயணியர் விமானம் அதிகாரப்பூர்வமாக வணிகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச்சேவை நிறுவனங்களுக்கு சீன வணிக விமான நிறுவனம் மொத்தம் 117 விமானங்களை ஒப்படைத்துள்ளது.
அது திறந்த 400க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வழித்தடங்கள், 140க்கும் அதிகமான நகரங்களுக்குச் சேவை செய்கின்றன.
தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை விரிவாக்க, ARJ21 பயணியர் விமானம் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறது.
சீனாவில், வடக்கு, வட கிழக்கு, வட மேற்கு, தென் மேற்கு, மத்திய தெற்கு ஆகிய பகுதிகளில் பரவும் விமானச் சேவை வலைபின்னல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ARJ21 பயணியர் விமானங்கள் முறையே இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சர்வதேச விமானச் சேவைகளில் சேர்க்கப்பட்டு, தென்கிழக்காசிய சந்தையில் நல்ல துவக்கத்தைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.