சீன- உருகுவே தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உருகுவே அரசுத் தலைவர் லாகலெ, பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட போது சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின் முதன்முறையாக சீனப் பயணம் மேற்கொண்ட அவர் கூறுகையில், பாரம்பரிம் மற்றும் நவீனமயமாக்கலின் தலைசிறந்த ஒன்றிணைப்பாக, சீனா திகழ்கிறது. கோவிட்-19 நோய் பரவலின் காலத்தில், உருகுவேவுக்குத் தடுப்பூசியைப் பகிர்ந்து கொண்ட சீனாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மனிதர்கள், நாடுகள் மற்றும் அரசுகளுக்கிடையில் நம்பிக்கையே, அடிப்படை இணைப்பாகும். அதனால், இரு நாட்டுப் ஒன்றுக்கொன்று நம்பிக்கை அதிகரிப்புக்கு நான் பங்காற்ற விரும்புகிறேன்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியில் மிக முன்னதாகக் கலந்து கொண்ட நாடுகளில் உருகுவே ஒன்றாகும். உருகுவே வணிகத் துறை பிரதிநிதிகள் பலர், சீனத் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றனர் என்று லாகலெ தெரிவித்தார்.