சீன-சாம்பிய அரசுத் தலைவர்களின் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 4ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில், பெய்ஜிங்கில் நடைபெறும் 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு வந்துள்ள சாம்பிய அரசுத் தலைவர் ஹிச்சிலீமாவுடன் சந்திப்பு நடத்தினார்.


இவ்வாண்டு, சீன-சாம்பிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த ஆண்டில், இரு தரப்புறவு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவாக உயர்த்தப்பட்டது.

கடந்த ஓராண்டில், இரு தரப்பு பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புக்கான சாதனைகள் அதிகம். இந்த உச்சிமாநாட்டின் மூலம், இரு தரப்புறவுக்கான புதிய அத்தியாயத்தை திறந்து வைக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author