தற்போது கால நிலை பிரச்சினை மென்மேலும் தீவிரமாகி வருகின்ற நிலைமையில், உலகம் முழுவதும் துபாய் மாநகரில் கவனம் செலுத்துகின்றது. இரு வாரம் நீடிக்கும் ஐ.நா கால நிலை மாற்றம் கட்டுக்கோப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தரப்புகளின் 28ஆவது மாநாடு நவம்பர் 30ஆம் நாள் துவங்கியது. சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நடத்திய பொது மக்கள் கருத்துக் கணிப்பு முடிவுன்படி, கால நிலை பிரச்சினையைச் சமாளிப்பதை எந்த நாடும் தப்பிச்செல்ல கூடாது. பலதரப்புவாதம், இப்பிரச்சினையைத் தீர்க்கும் அடிப்படை வழிமுறையாகும் என்று 90.3 விழுக்காட்டினர் கருதுகின்றனர். கால நிலை மேலாண்மை துறையில் சீனாவின் பங்கினை 91.4 விழுக்காட்டினர்கள் பாராட்டினர்.
ஆங்கிலம், ஸ்பேனிஷ், பிரேஞ்சு, அரபு, ரஷியா ஆகிய 5 மொழிகளின் மூலம் நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில், 24 மணிநேரத்துக்குள் 10 ஆயிரத்து 512 பேர் கலந்துகொண்டனர்.