சீன அதிபர் ஷி ச்சின்பிங், அண்மையில் கிழக்குப் பகுதியிலுள்ள ஜியாங் சூ மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஜியாங் சூ மாநிலத்தை மாதிரியாகக் கொண்டு, மேம்பட்ட ஆக்கத் தொழில் மற்றும் உண்மை பொருளாதாரத்தை முக்கியமாக கொண்ட நவீனத் தொழில் அமைப்பு முறையைச் சீனா கட்டியமைத்து, சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார்.
முதலில் உண்மைப் பொருளாதாரத்தில் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டாவதாக, அறிவியல் தொழில் நுட்பப் புதுப்பிப்பு துறையில் முன்னேற்றங்களைத் தொடர்ந்து பெற வேண்டும். மூன்றாவதாக, முக்கியத் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி பொருட்களின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் கட்டளையிட்டார்.