ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார்.
மேலும் ஒரு மேஜர் ரேங்க் அதிகாரி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சண்டை இன்னும் நடந்து வருவதால், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்த வீரர்கள், நடவடிக்கை நடக்கும் தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியப் படைகளுக்கு எதிராக பாகிஸ்தான் எல்லை நடவடிக்கைக் குழு(BAT) நடத்திய தாக்குதலை இந்திய ராணுவத் துருப்புகள் முறியடித்துள்ளன.