சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மலேசியத் தலைமை அமைச்சர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் ஏப்ரல் 16ம் நாள் மாலை மலேசியத் தலைமை அமைச்சர் மாளிகையில் நடைபெற்ற ஒத்துழைப்பு ஆவணங்களின் பரிமாற்ற விழாவில் பங்கேற்றனர்.
சீன ஊடகக் குழுமம்(சிஎம்ஜி), மலேசியாவுடன் 4 ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. புதிய ஒத்துழைப்பு ஆவணங்களின்படி, மலேசியாவுடன் சிஎம்ஜி நிலையான ஒத்துழைப்பு முறைமையை உருவாக்கவுள்ளது.
தகவல் பரிமாற்றம், கூட்டுத் தயாரிப்பு, திரைப்படப் பரிமாற்றம், நிகழ்ச்சிகளைக் கூட்டாக நடத்துவது முதலிய துறைகள் குறித்து, இரு தரப்பும் மேலதிக ஒத்துழைப்பை மேற்கொள்ளவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.