அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.
திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாதை இதுவாகும்.
முதற்கட்ட தகவலின்படி, ஹுன்லி மற்றும் அனினி இடையே ரோயிங் அனினி நெடுஞ்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கவலை தெரிவித்துள்ளார்.
“ஹுன்லி மற்றும் அனினிக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை அறிந்து வருத்தமடைந்தேன். இந்த சாலை திபாங் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சாலை என்பதால், விரைவில் இந்த சாலையை மீட்டெடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.