தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் 7 முதல் 11 cm வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.