சீனாவில் பயணியர் விமானச் சேவை வளர்ச்சி தொடர்பான திட்டத்தை சீனப் பயணியர் விமானப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது.
இத்திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டு சீனா விமானப் போக்குவரத்து துறையின் வல்லரசாக மாறும். விமானப் போக்குவரத்து மூலம் சீனாவின் முக்கிய நகரங்களுக்கிடையிலான பயணத்துக்கு மூன்று மணி நேரம் மட்டுமே தேவைப்படும்.
மையத் தொழில் நுட்ப சாதனங்கள் தற்சார்ப்புடன் தயாரிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. சீனா சொந்தமாக தயாரிக்கும் பெரிய விமானங்கள் பெருமளவில் இயங்கப்படும்.
இத்திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டுக்குள், சேவை, வசதி மற்றும் தொழில் நுட்பத் துறைகளில், நாட்டின் விமானப் போக்குவரத்து சேவை அமைப்பு முறையும் நவீனமயமாக்க பன்முக விமான நிலைய அமைப்பு முறையும் உருவாக்கப்படும்.
பயணியர் விமானத் துறை, டிஜிட்டல்மயமாகி, நுண்ணறிவு மயமாகி விவேகமயமாகி வரும் மாற்றம் பன்முகங்களிலும் நனவாக்கப்படும்.