உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்துதல் குறித்த செயல் திட்டம்
உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்துதல் குறித்த செயல் திட்டத்தைச் சீன அரசவை பொது அலுவலகம் அண்மையில் வெளியிட்டது. இதில், சீன பாணி நவீனமயமாக்கலில் பங்கேற்பதிலும், சீனப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் பொதுவான செழிப்பை ஊக்குவிப்பதிலும், வெளிநாட்டு முதலீடு முக்கிய ஆற்றலாகும் என்றும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்தும் வகையில், ஷி ச்சின்பிங்கின் புது யுகச் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோசலிச சிந்தனையை வழிகாட்டியாக நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் ஐந்து துறைகளில் நடவடிக்கைகளை முன்மொழிகிறது. முதலாவது, சந்தை நுழைவுக்கு அனுமதி வழங்குவதை விரிவாக்கி, வெளிநாட்டு முதலீட்டு தாராளமயமாக்க அளவை அதிகரிக்க வேண்டும்.
இரண்டாவது, கொள்கைகளின் செயல்பாட்டை வலுப்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.
மூன்றாவது, நியாயமான போட்டி சூழலை மேம்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு நல்ல சேவையை வழங்க வேண்டும். நான்காவது, புத்தாக்கத்துக்கான நிலைமைகளைச் சீராக உருவாக்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் புத்தாக்க ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும்.
ஐந்தாவது, உள்நாட்டு ஒழுங்குமுறைகளை மேம்படுத்தி, சர்வதேச உயர் நிலை பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும்.