செர்பியா அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 7ஆம் நாளிரவு சிறப்பு விமானம் மூலம் பெல்கிரேட் சென்றடைந்து அந்நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார்.
விமான நிலையத்தில் ஷிச்சின்பிங்கிற்குச் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியை வூசிச் நடத்தினார்.
ஷிச்சின்பிங் வழங்கிய எழுத்து மூல உரையில், இரு நாடுகளுக்கு அரசியல் ரீதியிலான ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கை வலுவாக உள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பை உயர்தர நிலையில் கூட்டாகக் கட்டியமைப்பதில் நிறைந்த சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
மேலும், இரு நாடுகளிடையில் நெருக்கமான பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆழமான நட்புறவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டுறவு பற்றியும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அரசுத் தலைவர் வூசிச்சியுடன் சேர்ந்து கருத்துக்களை ஆழமாகப் பரிமாற்ற விரும்புகிறேன்.
நட்புறவு, ஒத்துழைப்பு, கூட்டு வளர்ச்சி, இரு நாட்டுறவின் புதிய வளர்ச்சி ஆகியவை குறித்து கூட்டாக விவாதிப்பதை எதிர்பார்க்கிறேன் என்று ஷிச்சின்பிங் கூறினார்.