வரலாற்றில் புதிய உயர் பதிவுகளைக் கண்ட திபெத் பயணியர் விமானத் துறை

 

 

ஜுலை மாதத்தில் திபெத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள 7 பயணியர் விமான நிலையங்களில் 7.7 லட்சம் பயணங்களும், 5936 விமானங்களும் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட இவற்றில் முறையே 31.6 விழுக்காடு மற்றும் 2.4 விழுக்காடு அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. திபெத் பயணியர் விமானப் போக்குவரத்து 1965ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு, தனி ஒரு மாதத்தில் உச்ச பதிவுகளை இவை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்பீரமான மலைகள் மற்றும் ஆறுகள், சிறப்பான புல்வெளி மற்றும் காடுகள், ஆழ்ந்த தேசிய இன மற்றும் மத பண்பாடு ஆகியவற்றுடன், திபெத்தில் செழிப்பான சுற்றுலா வளங்கள் உள்ளன. கோவிட் கட்டுப்பாட்டைச் சரிப்படுத்திய பிறகு, இப்பிரதேசத்துக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

You May Also Like

More From Author