சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், செப்டம்பர் 19ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய சீன-அமெரிக்க உறவு மற்றும் அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாற்றி, அடுத்தக் கட்டத்தில் இரு நாட்டுறவு வளர்ச்சிக்கு வழிக்காட்டினர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீன-அமெரிக்க உறவு மிக முக்கியமானது. சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று பங்காற்றி, கூட்டு செழுமையை நனவாக்கி, இரு நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் நன்மை பயக்கும். இரு தரப்பு பிரதிநிதிகள் சமநிலை, மதிப்பு, ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது ஆகியவற்றைப் பின்பற்றி, இரு நாட்டுறவில் முக்கியமான பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். திக் தோக் பிரச்சினை குறித்து சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. அமெரிக்காவில் முதலீடு செய்யும் சீன தொழில் நிறுவனங்களுக்கு திறப்பான சமநிலையான மற்றும் பாகுபாடு செய்யாத சூழ் நிலையை அமெரிக்கா உருவாக்க வேண்டும் என சீனா விரும்புகின்றது என்றார்.