கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்திலுள்ள காற்றாலை பண்ணையின் மின் உற்பத்தி

கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டருக்கு மேலான உயரத்தில் அமைந்துள்ள காற்றாலை பண்ணை ஒன்றில், தனித்தனியாக 3.6 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 காற்றாற்றல் மின்னாக்கிகள் ஆகஸ்டு 3ஆம் நாள் வெற்றிகரமாக மின் உற்பத்தியைத் தொடங்கின.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷான்நான் நகரைச் சேர்ந்த சொமெய் மாவட்டத்தின் ஜேகு வட்டத்தில் அமைந்துள்ள இந்த காற்றாலை பண்ணையின் மொத்த மின்சார உற்பத்தித் திறன்
72.6 மெகாவாட் ஆகும். திபெத்தில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் காற்றாலை மின்சார வளர்ச்சிக்கான தொழில் நுட்ப ஆய்வு மற்றும் செயல் விளக்கத் திட்டப்பணியாகவும், திபெத்தின் முதன்மை மின் இணைப்பில் சேர்ந்த காற்றாற்றல் மின் உற்பத்தி திட்டப்பணியாகவும் இப்பண்ணை திகழ்கிறது. உலகளவில் பீடபூமி காற்றாற்றல் மின் உற்பத்தி வசதிகளின் கட்டுமானத்தில் இது அதிசயத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author