AFMS ஆட்சேர்ப்பு 2024 : மத்திய அரசின் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS) காலியாக உள்ள 450 மருத்துவ அதிகாரி பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் AFMS மருத்துவ அதிகாரி 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு ஆன்லைன் விண்ணபிக்கவும். அதிகாரப்பூர்வ இணையதளமான https://amcsscentry.gov.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் தொடங்கிய தேதி
16.07.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி
04.08.2024
காலியிட விவரங்கள்:
1. மருத்துவ அதிகாரி – 450 (ஆண்களுக்கு 338 இடங்கள் , பெண்களுக்கு 112 இடங்கள்)
கல்வி தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது:
விண்ணப்பதாரர்கள் MBBS பட்டம் பெற்றிருந்தால் 30 வயது நிரம்பியிருக்கக்கூடாது. ஜனவரி 02, 1995 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 35 வயது நிரம்பியிருக்கக்கூடாது. ஜனவரி 02, 1990 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200/- செலுத்த வேண்டும்.
சம்பளம்:
ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் பணியமர்த்தப்படும் மருத்துவர்களுக்கு ரூ.61300 + MSP, ரூ.15500 + HRA மாத சம்பளமாக வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://amcsscentry.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 16.07.2024 இல் தொடங்கி 04.08.2024 இல் முடிவடையும்.
முக்கிய விவரம்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
https://amcsscentry.gov.in
விண்ணப்ப படிவம்
க்ளிக்