அசாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) 5.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் அதிர்வுகள் மேற்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான பூட்டானிலும் உணரப்பட்டன.
நிலநடுக்க அறிவியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, இதன் மையப்புள்ளி அசாமின் உதல்குரி மாவட்டத்தில், பூமியின் அடியில் 5 கிமீ ஆழத்தில் இருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாகப் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இருப்பினும், இதுவரை எந்தவித உயிரிழப்போ அல்லது பெரிய சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம்
