அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போதைய அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், தகுதியான கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மூன்று வாரங்களில் அமெரிக்க குடியுரிமையைப் பெற முடியும் என்று ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகளின் (AAPI) வெற்றி நிதியத்தின் தலைவரும் நிறுவனருமான சேகர் நரசிம்மன் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
நவம்பர் 5 அன்று அமெரிக்கா தனது ஜனாதிபதியை முடிவு செய்ய வாக்களிக்கின்றது.