குண்டுகள் ஆலங்கட்டிகளைப் போன்று விழுந்து வெடித்தன. நாங்கள் ஷாங்ஹாய் என்ற சாலையில் சென்ற போது, நிறைய உயிரிழந்த அப்பாவி மக்களைப் பார்த்தோம் என்று 88 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் நன் ஜிங் நகரில் கண்டதை ஜெர்மனியைச் சேர்ந்த ஜோன் பேலா இவற்றைப் பதிவு செய்தார். அவர் எழுத்திய பேலா நாட்குறிப்பு, நன் ஜிங் நகர் படுகொலையைப் பதிவு செய்த மிக முக்கியமான சான்றாக மாறியுள்ளது.
88 ஆண்டுகளுக்கு பிறகு, நன் ஜிங் படுகொலையில் உயிரிழந்தோருக்கான 12ஆவது தேசிய பொது அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 3 இலட்சம் சீனர்கள் இதில் கொல்லப்பட்டனர். சீனாவை ஆக்கிரமித்த ஜப்பான் ராணுவப் படைகள், நன் ஜிங் படுகொலை சம்பவத்தை நடத்தின. இது மாற்றப்பட முடியாத வரலாற்று உண்மை ஆகும்.
ஆனால், இப்போது வரை, ஆக்கிரமிப்பு போர் குறித்து, ஜப்பான் அரசு தன்னைத் தற்சோதனை செய்யவில்லை.
ஜப்பானின் இராணுவ வெறி, முற்றிலும் அழிக்கப்படவில்லை என்று அண்மையில் ஜப்பான் மேற்கொண்ட இராணுவவாத நடவடிக்கைகள் வெளிக்காட்டின. இது குறித்து சர்வதேச சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வரலாற்றை மறந்து விட்டது என்பது காட்டி கொடுப்பது தான். குற்றங்களை மறுத்தால், மீண்டும் குற்றம் செய்யக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
