சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மனிதகுல பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பதை முன்மொழிந்த 10ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். இது பற்றிய சிறப்பு அறிக்கை ஒன்றை சீன ரென் மின் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மனிதகுல பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்தின் நடைமுறைகள் தொகுக்கப்பட்டு சிந்தனை கிடங்கு இந்த அறிக்கையின் வடிவில் வெளியிடப்பட்டது இதுவே முதன்முறை.
மனிதகுல பொது எதிர்கால சமூகம் ஷி ச்சின்பிங் தூதாண்மை சிந்தனையின் முக்கிய அம்சமாகும். உலக ஒழுங்கை மேம்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்ட சீனாவின் உலக கனவு இதுவே ஆகும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.