2023ஆம் ஆண்டு ஆசிய வளர்ச்சி முன்னாய்வு அறிக்கையை ஆசிய வளர்ச்சி வங்கி ஏப்ரல் 4ஆம் நாள் வெளியிட்டது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஆசிய வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 4.8 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவும் இந்தியாவும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய நாடுகளாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5.0 விழுக்காடாகவும், அடுத்த ஆண்டில் 4.5 விழுக்காடாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.4 விழுக்காடாகவும், அடுத்த ஆண்டில் 6.7 விழுக்காடாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில பகுதிகளில் சுற்றுலாத் துறை மீட்சி அடைந்து வருவது, பணம் அனுப்புதல் மற்றும் வங்கி பரிமாற்றத் தேவை அதிகரிப்பு, சீனாவின் திறப்பு சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறையின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவது ஆகியவை இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் பொருளாதாரத்தின் வலுவான மீட்சிக்கான முக்கியக் காரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.