போஆவ் ஆசிய மன்றத்தின் 2023ம் ஆண்டுக் கூட்டம் தற்போது சீனாவின் போ ஆவ் நகரில் நடைபெற்று வருகிறது. சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம், உலகிற்கு ஒரு புதிய வளர்ச்சி வழிமுறையை வழங்குகிறது என்று 29ம் நாள் சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட விவாதத்தில் பங்கெடுத்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
போ ஆவ் ஆசிய மன்றத்தின் செயற்குழு ஆளுநரும், ரூய் அன் குழுமத்தின் தலைமை இயக்குநருமான லுவோ காங் ரூய் கூறுகையில், சீனாவின் நவீனமயமாக்கம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி காணப்பட்ட நிலையில், இது, சீனாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.