அகதிகள் மற்றும் குடியேறுவோரின் மனித உரிமைகளை அமெரிக்கா மீறுவது தொடர்பான உண்மை பற்றிய அறிக்கை 30ஆம் நாள் வெளியிடப்பட்டது. வரலாறு மற்றும் யதார்த்தம், உள்நாடு மற்றும் சர்வதேசம் ஆகியவற்றிலிருந்து அகதிகள் மற்றும் குடியேறுவோரின் பிரச்சினையில் அமெரிக்காவின் தவறான செயல்களை இந்த அறிக்கை உண்மையுடன் பதிவு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய குடியேற்றத் தடுப்புக் காவல் அமைப்பு முறையை அமெரிக்கா நிறுவியுள்ளது. செலவுகளைச் சிக்கனப்படுத்தும் வகையில், அமெரிக்க அரசு குடியேற்ற தடுப்புக் காவல் முகாம்களைத் தனியார் நிறுவனங்களின் கட்டுமான மற்றும் செயல்பாட்டை ஒப்படைத்துள்ளது. 2019ஆம் ஆண்டில், பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 விழுக்காட்டுக் குழந்தைகள் 5 வயதுக்குக் குறைவானவர். அதோடு தற்போது வரை, அமெரிக்கச் சமூகத்தில் குடியேறுவோர் மற்றும் அவர்களின் எதிர்கால தலைமுறையினர்களுக்கு எதிராக கடுமையான பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் “ஆசிய மக்களுக்கு எதிரான பாகுபாடு” பிரச்சினை மோசமாகி வருகின்றது.