சீனத் தேசிய கப்பல் கட்டுமான நிறுவனம் அண்மையில் பிரான்ஸின் CMA-CGM கப்பல் போக்குவரத்து குழுமத்துடன் ஒத்துழைப்பு உடன்படிக்கையை உருவாக்கியுள்ளது. 16 பெரிய ரக கொள்கலன் கப்பல்களைத் தயாரிப்பது உள்ளிடக்கும் ஒப்பந்த மதிப்பு 2100 கோடி யுவானைத் தாண்டி, சீனாவின் கப்பல் கட்டுமானத் தொழிலில் மற்றொரு புதிய பதிவாகியுள்ளது. உயர் தொழில் நுட்பங்களை அதிகமாகக் கொண்டுள்ள கப்பல் தயாரிப்பு, சீனாவின் உயர்தர வளர்ச்சியில் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சீனா தயாரித்த முதலாவது பெரிய ரக சொகுசு கப்பல் தற்போது ஒப்படைப்புக்கு முந்தைய சோதனைக் கட்டத்தில் உள்ளது. உலகளவில் மிகச் சிக்கலான தனித்த இயந்திர மின்சார தயாரிப்பாக, இக்கப்பலின் உதிரி பாகங்களின் எண்ணிக்கை 2 கோடியே 50 லட்சம் அதிகமாகும். சர்வதேச தரநிர்ணயத்தை முழுமையாக எட்டியுள்ள பெரிய சொகுசு கப்பலைக் கட்டமைத்த சீனா, உலகளவில் இத்தகைய கப்பலைக் கட்டும் திறனுடைய 5ஆவது நாடாக விளங்குகிறது.